என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பால் போக்பா
நீங்கள் தேடியது "பால் போக்பா"
மான்செஸ்டர் யுனைடெட்டின் பால் போக்பாவை எப்போதுமே பார்சிலோனா வரவேற்க இருக்கிறது என்று லூயிஸ் சுவாரஸ் தெரிவித்துள்ளார். #PaulPogba
பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னணி வீரர் பால் போக்பா. 25 வயதாகும் அட்டக்கிங் மிட்பீல்டரான போக்பா கடந்த 2016-ம் ஆண்டு யுவான்டஸ் அணியில் இருந்து மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு டிரான்ஸ்பர் ஆனார். மிகப்பெரிய தொகைக்கு (105 மில்லியன் யூரோ) போக்பாவை மான்செஸ்டர் யுனைடெட் வாங்கியது.
ஆனால் அணியின் தலைமை பயிற்சியாளரான ரோஸ் மவுரினோவிற்கும், போக்பாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் இன்னும் முடிந்த பாடில்லை. இதனால் போக்பா மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து விலகி பார்சிலோனா அல்லது ரியல் மாட்ரிட் அணியில் சேரலாம் என்ற வதந்தி பரவிக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் பார்சிலோனா அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான லூயிஸ் சுவாரஸ், பால் போக்பாவை எப்போதுமே பார்சிலோன வரவேற்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அரையிறுதியில் பெற்ற வெற்றியை இங்கிலாந்து வீரர் பால் போக்பா குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு அர்ப்பணித்துள்ளார். #WorldCup2018 #thaicaverescue
தாய்லாந்து நாட்டில் கால்பந்து விளையாடும் 11 முதல் 16 வயதுடைய 12 சிறுவர்கள், தங்களது பயிற்சியாளருடன் குகையில் சிக்கிக் கொண்டனர். 18 நாட்கள் குகையில் தவித்த அவர்களை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். சிறுவர்களை மீட்ட மீட்புக் குழுவினருக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த செய்தி உலகக்கோப்பையில் விளையாடும் பிரான்ஸ் நட்சத்திர வீரரான பால் போக்பாவையும் எட்டியது.
நேற்று பெல்ஜியத்திற்கு எதிரான ஆட்டத்தில் பிரான்ஸ் 1-0 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றியை தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு அர்பணிப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
போக்பா தனது டுவிட்டர் பக்கத்தில் மீட்கப்பட்ட சிறுவர்களின் படத்தை வெளியிட்டு ‘‘இன்றைய நாளில் ஹீரோக்கள் ஆன சிறுவர்களுக்கு இந்த வெற்றி செல்கிறது. வெல்டன் பாய்ஸ், நீங்கள் எப்போதும் வலிமையானவர்கள்’’ ட்வீட் செய்துள்ளார்.

This victory goes to the heroes of the day, well done boys, you are so strong 🙏🏾 #thaicaverescue#chiangraipic.twitter.com/05wysCSuVy
— Paul Pogba (@paulpogba) July 10, 2018
பிரான்ஸ் கால்பந்து அணி வீரரான மப்பேயிடம் என்னைவிட அதிக திறமை உள்ளது சக நாட்டு வீரரான பால் போக்பா தெரிவித்துள்ளார். #WorldCup2018 #Mbappe
உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டு நாக்அவுட் சுற்று போட்டிகள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் - அர்ஜென்டினா மோதின. இதில் 4-3 என பிரான்ஸ் வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு பிரான்ஸ் அணியின் முன்னணி வீரரான கிலியான் மப்பே இரண்டு கோல்கள்தான் முக்கிய காரணம். 19 வயதே ஆன மப்பே 64 மற்றும் 68-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார்.
மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வரும் மற்றொரு பிரான்ஸ் வீரரான பால் போக்பா சிறந்த வீரராக கருதப்படுகிறார். மிட்பீல்டரில் சிறந்த வீரரான போக்பா, என்னைவிட கிலியான் மப்பேவிற்கு அதிக திறமை உள்ளது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து பால் போக்பா கூறுகையில் ‘‘கிலியான் மப்பே மிகவும் வேகமாக ஓடக்கூடியவர். அவரை ஒப்பிட்டு பேசுவது சரியாகாது. என்னைவிட அவருக்கு அதிக திறமை உள்ளது’’ என்றார்.

×

X